அதிக விலையில் அரிசி விற்பனை செய்பவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலையில் அரிசி விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, தனியார் நிறுவனங்களுக்கும் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் 5 இலட்சம் ரூபாய் முதல் 50 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தனியுரிமை வர்த்தக நிலையங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் சந்திக்க நேரிடும்.
இத்தகைய விலைக் கட்டுப்பாட்டு மீறல் குறித்து பொதுமக்கள் 1977 என்ற இலக்கத்துக்கு முறைப்பாடளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அரிசி வகைகளுக்கு அதிகபட்ச கட்டுப்பாட்டு விலையை விதித்துள்ளது.
இந்த விலை கட்டுப்பாடுகள், நியாயமற்ற வியாபாரத்தைத் தடுப்பதற்கும், சந்தை நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.