அடக்கி வளர்க்காத பிள்ளையால் அவஸ்தைப்படும் நடிகை பியூமி ஹன்சமாலி!
இலங்கை நடிகையும், மொடலுமான நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் உட்பட ஏழு சந்தேக நபர்களுக்கும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்க கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌஷல்ய புதன்கிழமை(18) உத்தரவிட்டார்.
ராஜகிரிய, கலபலுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும், சம்பவத்தில் சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்
இந்நிலையில் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்காக, சிறைச்சாலை அதிகாரிகளால் அவர்கள் முகத்தை மூடிய நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட சாட்சியாளர் (முச்சக்கர வண்டி சாரதி) சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அடையாள அணிவகுப்பை ஒத்திவைத்து, சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிக்க நீதவான் உத்தரவிட்டார்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, ராஜகிரிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பியுமியின் மகனின் நண்பர் ஒருவர், முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் அங்கு வந்த பியுமியின் மகன் உள்ளிட்ட குழுவினர், முச்சக்கர வண்டி சாரதியைத் தாக்கியுள்ளமை தொடர்பாக வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.