குழந்தைகளுக்கு ஆபத்தை தரும் பொம்மைகள் ; சுகாதாரத் துறையின் விடுத்துள்ள எச்சரிக்கை
சந்தையில் உள்ள பேட்டரி மூலம் இயங்கும் விளையாட்டுப் பொருட்களால் குழந்தைகளின் உயிர்கள் பாதிக்கப்படும் என பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பேட்டரியில் இயங்கும் விளையாட்டுப் பொருட்கள்
பேட்டரிகளில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதால், குழந்தைகள் அவற்றை விழுங்கினால், அவை எலக்ட்ரோ-கெமிக்கல் செயல்பாட்டின் மூலம் குழந்தைக்கு ஆபத்தானவை என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொம்மைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதோடு, அவற்றில் பேட்டரியில் இயங்கும் பொம்மைகளும் உள்ளன.
இவ்வாறான பொம்மைகளை பயன்படுத்தும் போது குழந்தைகளின் பேட்டரிகளை விழுங்கினால் அவர்களின் உயிர்கள் பாதிக்கப்படும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.