வெடித்த போர்? இஸ்ரேல் - ஈரானின் ஏவுகணைகளை வீழ்த்தும் 3வது நாடு

Israel Iran Palestine Gaza
By Sahana Jun 14, 2025 12:42 AM GMT
Report

ஈரான் மீது இன்று அதிகாலையில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுஆயுத தயாரிப்பை முடக்கும் நோக்கத்தில் யுரேனியம் செறிவூட்டல் மையத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது.

கணவரால் சுவிஸ்க்கு அழைக்கப்பட்ட மனைவி காதலனுடன் தலைமறைவு

கணவரால் சுவிஸ்க்கு அழைக்கப்பட்ட மனைவி காதலனுடன் தலைமறைவு

இதற்கு பதிலடியாக ஈரான் ட்ரோன் தாக்குதலை தொடங்கி உள்ளது. இருநாடுகள் இடையே கடும் மோதல் வெடித்துள்ள நிலையில் ஜோர்டான், ஈராக் நாடுகள் பதற்றமாகி உள்ளன.

தனது வான்பரப்பில் பறக்கும் ஏவுகணை, ட்ரோன்களை ஜோர்டான் இடைமறிப்பதால் போர் வெடிக்கும்அச்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக மோதல் உள்ளது.

பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு, லெபனானில் இயங்கும் ஹெஸ்புல்லா அமைப்பு, ஓமனில் இருக்கும் ஹவுதி அமைப்பு உள்ளிட்டவற்றிற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

வெடித்த போர்? இஸ்ரேல் - ஈரானின் ஏவுகணைகளை வீழ்த்தும் 3வது நாடு | War Broke Out Israel 3Rdcountry Shoot Down Iranian

இந்த அமைப்பினர் இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில், ஹமாஸ்க்கு எதிராக தற்போது போர் நடந்து வருகிறது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலை வலுவாக்கி உள்ளது. கடந்த ஆண்டு ஈரான் தனது ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது.

இஸ்ரேலின் 100க்கும் அதிகமான போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் இருந்தாலும் தாக்குதல் நடைபெறவில்லை.

இதற்கிடையே தான் இன்று ஈரான் மீது இஸ்ரேல் திடீரென்று ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. ஈரானின் அணுசக்தி திட்டங்களின் உள்கட்டமைப்பு மற்றும் ராணுவதளங்களை இஸ்ரேல் குறிவைத்து அடித்தது.

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு

தற்போது இஸ்ரேலுக்கு, ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் பல நூறு ட்ரோன்களை இஸ்ரேல் நோக்கி அனுப்பி வருகிறது. இருநாடுகள் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையே தான் இஸ்ரேல் - ஈரான் மோதலுக்கு நடுவே சிக்கி அப்பாவியான ஜோர்டான், ஈராக் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. அதாவது இஸ்ரேலும், ஈரானும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இருநாடுகள் இடையேயான தொலைவு 2,315 கிலோமீட்டராக உள்ளது.

இந்த இருநாடுகள் இடையே ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகியவை உள்ளன. ஈரானும், இஸ்ரேலும் போர் விமானங்கள், ட்ரோன், ஏவுகணைகளை தாக்குதலுக்கு பயன்படுத்தினால் அவை ஜோர்டான், ஈராக் வான் எல்லைகளை கடந்து தான் செல்ல வேண்டும்.

இன்று அதிகாலையில் இஸ்ரேல் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ஈரான் பதிலுக்கு அனுப்பிய ட்ரோன்கள் ஜோர்டான், ஈராக் வான்வெளி பரப்பில் பறந்துள்ளன. இதனால் இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஜோர்டான், ஈராக்கிலும் பதற்றம் நிலவி வருகிறது.

வெடித்த போர்? இஸ்ரேல் - ஈரானின் ஏவுகணைகளை வீழ்த்தும் 3வது நாடு | War Broke Out Israel 3Rdcountry Shoot Down Iranian

இதுபற்றி ஜோர்டான் ராணுவம் தரப்பில், ‛‛இன்று காலையில் எங்களின் வான்வெளி பரப்பில பறந்த ட்ரோன்கள், ஏவுகணைகளை நாங்கள் வைத்திருக்கும் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் இடைமறித்தது.

ராயல் போர் விமானம் மற்றும் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் தான் ட்ரோன், ஏவுகணைகளை இடைமறித்தது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரேலின் ஏவுகணை, ஈரானின் ட்ரோன்களை ஜோர்டான் இடைமறித்து அழித்து வருவது உறுதியாகி உள்ளது.

இந்த ஏவுகணை, ட்ரோன்கள் அனுமதியின்றி தங்களின் நாட்டு வான்எல்லையில் பரப்பதாலும், தங்களின் நாட்டின் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏவுகணை, ட்ரோன்களை ஜோர்டான் இடைமறித்து வருகிறது.

மன்னாரில் கரையொதுங்கிய ஆபத்தான பொருட்கள்!

மன்னாரில் கரையொதுங்கிய ஆபத்தான பொருட்கள்!

மேலும் இந்த ட்ரோன், ஏவுகணைகள் எந்த நாட்டுக்கு சொந்தமானது என்பதை ஜோர்டான் உறுதி செய்யவில்லை. அதேபோல் ஈராக்கின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‛‛100க்கும் அதிகமான ட்ரோன்கள் எங்களின் வான்வெளி பரப்பில் பறந்தன.

இந்த ட்ரோன்கள் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி அனுப்பபட்டவையாகும்'' என்று தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இஸ்ரேல் ஏற்கனவே காசா மீது போர் தொடுத்து வரும் நிலையில் இப்போது அந்த நாட்டுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதனால் இன்னொரு போர் வருகிறதா? என்ற அச்சம் உருவாகி உள்ளது. 

யாழ். சாவகச்சேரி நகர சபை ஆட்சியை கைப்பற்றிய தமிழ் தேசிய பேரவை

யாழ். சாவகச்சேரி நகர சபை ஆட்சியை கைப்பற்றிய தமிழ் தேசிய பேரவை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US