அதிரடிப்படையினரிடம் சிக்கிய கடத்தல்காரர் ; கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம்
பெருமளவிலான கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கிய சந்தேக நபர் ஒருவர், 16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 9 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தொகையுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை பிரிவு Iஇன் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (27) கொஸ்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹடவில - பொத்துவட்டன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர் கஹடவில, பொத்துவட்டன பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஆவார்.
16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 9 இலட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.