உணவில் உள்ள முழு சத்துக்களை பெற வேண்டுமா? அப்ப இப்படி சாப்பிடுங்க...
நாம் அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறோம். ஆனால் வெறும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டால் மட்டும் உடல் ஆரோக்கியம் மேம்படுமா என்றால் நிச்சயம் இல்லை.
எப்பேற்பட்ட ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், அதை சரியான முறையில் உட்கொண்டால் மட்டுமே அதில் உள்ள முழு சத்துக்களைப் பெற முடியும்.

அதாவது ஒரு உணவில் உள்ள முழு சத்துக்களைப் பெற அந்த உணவை சரியான மற்றொரு உணவுடன் சேர்த்து உட்கொண்டால் தான், உடலால் அந்த சத்துக்களை சரியாக உறிஞ்சி உடலுக்கு வழங்க முடியும். எனவே வெறுமனே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாமல், சரியான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளுங்கள்.
சரியான உணவுச் சேர்க்கைகள், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கணிசமாக மேம்படுத்தவும், ஹார்மோன் சமநிலையைப் பேணவும், செரிமானத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவும். சரியான ஊட்டச்சத்துக்களை இணைப்பதன் மூலம், அன்றாட உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் ஆதரவளிப்பதில் அதிக செயல்திறன் மிக்கவையாக மாறுகின்றன

கீரைகள் + வைட்டமின் சி உணவுகள்
கீரைகளை எப்போது சாப்பிட்டாலும், அத்துடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்த்து உட்கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது கீரையில் உள்ள இரும்புச்சத்து மூன்று மடங்கு உடலுக்கு கிடைக்க வேண்டுமானால், இந்த வைட்டமின் சி மிகவும் அவசியம்

கேரட் + நெய்
நீங்கள் வெறும் கேரட்டை மட்டும் சாப்பிடுவீர்கள் என்றால், இனிமேல் கேரட்டுடன் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிடுங்கள். ஏனெனில் அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ-யை பீட்டா கரோட்டீனாக மாற்றி உடலில் எளிதில் உறிஞ்சுவதற்கு உதவும் மற்றும் சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்

சியா விதைகள் + யோகர்ட்
சியா விதைகளை எலுமிச்சை ஜூஸ் உடன் சேர்த்து சாப்பிடுவதற்கு பதிலாக, யோகர்ட்டுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் ப்ரீ பயோடிக்ஸ் மற்றும் ப்ரோ பயோடிக்ஸ் ஒன்று சேரும் போது குடலில் உள்ள பாக்டீரியாக்கள் நன்கு மீண்டும் உருவாகும், இன்சுலின் சென்சிட்டிவிட்டியும் சிறப்பாக இருக்கும் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சமநிலையில் இருக்கும்
