பாலின சமத்துவ விவாதத்தை மீண்டும் தூண்டிய வைரல் நேர்காணல்
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளி ஒன்றில், பெண்கள் வயது வந்தோருக்கான (Adult Content) உள்ளடக்கங்களைப் பார்ப்பார்களா என்பது தொடர்பாக இளம் பெண்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் வழங்கிய பதில்களும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன.
18 முதல் 28 வயதுக்குட்பட்ட பல இளம் பெண்கள் கலந்து கொண்ட இந்த நேர்காணலில், ஆரம்பத்தில் சிலர் சங்கடத்துடன் சிரித்தாலும், பின்னர் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டனர்.
சில பெண்கள், இவ்வாறான உள்ளடக்கங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கானவை என்ற கருத்தை வெளியிட்டனர்.

அதேவேளை, மற்றொருபகுதியினர், பெண்களும் தனிப்பட்ட ஆர்வம் அல்லது உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் நோக்கில் இத்தகைய உள்ளடக்கங்களைப் பார்ப்பதாகக் குறிப்பிட்டனர்.
மேலும், “இது தனிப்பட்ட விருப்பம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த விடயம்” என்றும், “பெண்கள் இதுகுறித்து பொதுவெளியில் அதிகமாகப் பேசுவதில்லை” என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது.
ஒரு தரப்பினர், “தற்போதைய தலைமுறையின் திறந்த மனப்பான்மையை இது காட்டுகிறது” எனக் கருத்து வெளியிட்டுள்ள நிலையில், மற்றொரு தரப்பினர் பெண்களின் தனிப்பட்ட விடயங்களை பொதுவெளியில் கேள்வி எழுப்பிய விதம் குறித்து விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்தக் காணொளி, பாலின சமத்துவம், தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சமூக மனப்பான்மை தொடர்பான விவாதங்களை மீண்டும் சமூக வலைத்தளங்களில் தீவிரப்படுத்தியுள்ளது.