மெகசின் சிறைச்சாலையில் வன்முறை மோதல் ; உயிரிழந்த கைதியின் பின்னணி

Sri Lanka Police Sri Lanka Negombo Department of Prisons Sri Lanka Drugs
By Sahana Aug 07, 2026 05:03 PM GMT
Report

பொரள்ளை புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) நள்ளிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

யாழில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது இளைஞன் ; பொலிஸார் தீவிர விசாரணை

யாழில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது இளைஞன் ; பொலிஸார் தீவிர விசாரணை

விசேட விசாரணைகள்

வெளியில் இருந்து சிலர் சிறைச்சாலை வளாகத்திற்குள் எறிந்த ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்றைச் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்ற சம்பவத்தை மையமாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

மெகசின் சிறைச்சாலையில் வன்முறை மோதல் ; உயிரிழந்த கைதியின் பின்னணி | Violent Clash Magazine Prison Background Deceased

அச்சமயத்தில் ஒரு குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன், பின்னர் சுமார் 45 கைதிகள் சிறைக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் "கொஸ்மல்லி" என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் உதவியாளர்கள் எனக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைதியின்மையில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயில் வழியாக வெளியேற முயன்றபோது, நிலமையைக் கட்டுப்படுத்தச் சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாகப் போராடியுள்ளனர்.

இரு குழுக்களுக்குமிடையே ஏற்பட்ட இந்த மோதலின் போதே ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம, கட்டுவன பகுதியைச் சேர்ந்த முகமது அஸ்மான் ஷெரிப்டீன் (35 வயது) என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இவர் கல்கிஸை வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைப் கொலை மற்றும் நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டைப் கொலை உட்படப் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார்.

மேலும், "ஹோமாகம ஹந்தயா" என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கூலிப்படை துப்பாக்கிதாரியாக பணியாற்றியதாகக் கூறப்படும் இவருக்கு எதிராகக் காலி, அம்பாறை, நீர்கொழும்பு, ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிறை கலவரங்கள் ; கைதிகளின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிறை கலவரங்கள் ; கைதிகளின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

அத்துடன், கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலைச் சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபராகவும் இவர் ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 10 கைதிகள் சிகிச்சைக்காகச் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மோதலை வழிநடத்தியதாகக் கருதப்படும் 9 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்த நடவடிக்கை ; அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார

கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்த நடவடிக்கை ; அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US