கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிறை கலவரங்கள் ; கைதிகளின் நிலை தொடர்பில் வெளியான தகவல்
குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகளின் கட்டுப்பாடும் தற்போது முழுமையாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை பதற்றமான நிலைமை நிலவிய இவ்விரு சிறைச்சாலைகளின் நிலைமையும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.
பல்லன்சேன சிறைச்சாலை கலவரத்தில் காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப்படை, கலவரத் தடுப்புப் பிரிவு மற்றும் விமானப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டை மீண்டும் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.