யாழ் பிரபல பாடசாலையில் நடக்கும் வன்முறைகள்; மூடிமறைக்கப்படும் ரகசியங்கள்!

Jaffna Child Abuse Education School Children
By Independent Writer Jun 05, 2024 12:30 AM GMT
Independent Writer

Independent Writer

Report

 யாழ்ப்பாணம் வலி தெற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள சைவமும் தமிழும் தழைத்தோங்கும் குப்பிழான் கிராமத்தில் அமைந்துள்ள யா/ குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்.

குப்பிளான் கிராமத்தில் உள்ள ஒரே ஒரு பாடசாலை இது ஆகும். இந்த பாடசலையில் ஆரம்பபிரிவு முதல் கா.பொ. த சாதாரண தரம் மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர்.

யாழ் பிரபல பாடசாலையில் நடக்கும் வன்முறைகள்; மூடிமறைக்கப்படும் ரகசியங்கள்! | Violence In Popular School In Jaffna Kuppilan

மாணவர்கள் மீது தாக்குதல்

இப் பாடசாலையில் படித்த பழையமாணவர்கள் உள்ளிட்ட பிள்ளைகள் பலர் பல்வேறு துறைகளிலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமக்கான ஆளுமையில் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் பலரும் விசனங்களை முன்வைத்து வருகின்றனர்.

யாழ் பிரபல பாடசாலையில் நடக்கும் வன்முறைகள்; மூடிமறைக்கப்படும் ரகசியங்கள்! | Violence In Popular School In Jaffna Kuppilan

அதாவது இப்பாடசாலையில் உதவியாளரான ஆசிரியர் ஒருவர் தரம் 4 மாணவிகள் மீது தாக்கியதில்  இரண்டு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குறித்த  பாடசாலையில்   தரம் நான்கு வகுப்பில் 15 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

வகுப்பு ஆசிரியர் 5 மாணவர்களை மாத்திரம் கற்பித்து கொண்டு ஏனைய 10 மாணவர்களை கற்பிப்பதற்கு க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடைந்த 20 வயதான யுவதி ஒருவரை 10000 ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தியுள்ளார். மாணவிகள் இருவர் பரீட்சையில் குறைவான புள்ளி எடுத்ததன் காரணமாக குறித்த பெண் மாணவர்களை தடியால் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.

பிரான்ஸில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மரணம்

பிரான்ஸில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மரணம்

இதனையடுத்து பாதிக்கப்பட்ட  மாணவிகளின் பெற்றோரும் அதிபருடன் முரண்பட்துடன், பாதிக்கப்பட்ட மாணவியின்பெற்றோர் தனது முகநூலில் பிள்ளையின் நிலையினை புகைப்படம் எடுத்து பதிவேற்றியுள்ளார்.

அதுமட்டுமல்லாது வகுப்பு ஆசிரியர் தனது வீட்டில் தான்  எடுக்கும் பிரத்யேக வகுப்புக்களுக்கு பிள்ளைகள் செல்லவில்லை என கூறியும் அடித்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ் பிரபல பாடசாலையில் நடக்கும் வன்முறைகள்; மூடிமறைக்கப்படும் ரகசியங்கள்! | Violence In Popular School In Jaffna Kuppilan

இப்பாடசாலையில் கல்விகற்றுவரும் மாணவர்கள் பலர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் . இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி அங்குள்ள படித்த இளைஞர்கள் சிலர் இலவசமாக பிரத்யேக வகுப்புக்களை மாணவர்களுக்கு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த வகுப்புக்களுக்கு செல்லக்கூடாது என , சம்பந்தப்பட்ட ஆசியை மற்றும் அதிபர் பிள்ளைகளை மிரட்டி வைத்துள்ளதாகவும், மீறி செல்லும் மாணவர்களை தண்டிப்பதாகவும் தெரியவருகின்றது.

 மூடிமறைக்க முயன்ற வலய கல்விப்பணிப்பாளர்

இது இவ்வாறிருக்க, பிள்ளையளுக்கு அடி விழுந்ததை முதலில் பிள்ளையள் தங்களுக்குள்ள அடிபட்டதை இப்பிடி மாத்திச் சொல்லுகினம்" என வலயக் கல்விப்பணிப்பாளரே அப்படி ஒரு விடயம் நடக்கவில்லை என கூறியிருந்தமை பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.. இதனையடுத்து பிள்ளையளின் பெற்றோர் பிரதேச செயலகத்திற்கு சென்று சிறுவர் உத்தியோகத்தரிடமும் புகார் அளித்ததாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த சிறுவர் உத்தியோகத்தர் பாடசாலைக்கு சென்று அதிபரையும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தி அறிக்கையை எழுதி சென்றதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளிடமோ , அல்லது அவர்களின் பெற்றோர்களிடமோ நடந்ததை அறிய முற்படவிலை எனவும் கூறப்படுகின்றது. அதோடு பிள்ளைகளின் வீடு சென்று விசாரிக்கவில்லையா என கேட்டவர்களிற்கு அவர்களின் விலாசம் தெரியாது என அசட்டையாக  சிறுவர் உத்தியோகத்தர் பதில் கூறியதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் யா/ குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலத்திற்கு , வெளிநாடுவாழ் புலம்பெயர் ஊரவர்களும் பழைய மாணவர்கள் பலரும்   நிதி உதவி அளித்துவரும் நிலையில் , மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தை அவர்கள்  கண்டுகொள்ளாமலிருப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை  ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்த குப்பிளான்  விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் , தற்போது மாணவர் சேர்க்கை குறைந்தளவில் காணப்படுவதாக பலரும் வேதனை வெளியிட்டுவரும் நிலையில் , இவ்வாறான  மாணவர்கள் மீதான  காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்  சம்பவங்கள் பாடசாலையின் இருப்பை கேள்விக்குறியாக்கும் என  பாடசாலையின் முன்னாள் அதிபர் மற்றும் ஆரியர்கள் சிலரும்  வேதனை வெளியிட்டுள்ளனர்.          

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US