அஜித்தை ஆரத்தழுவி முத்தமிட்ட தமிழக முதலமைச்சர் விஜய் ; இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிக் காட்சி
இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரபல நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தள அவதூறு விவகாரம் ; யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 14 மனுதாரர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
2026ஆம் ஆண்டுக்கான 'மிச்செலின் லீ மான்ஸ் கிண்ண' பந்தயத் தொடரின் 5 ஆவது சுற்று லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெறுகிறது.
44 பந்தய சிற்றூந்துகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டப் போட்டியை, ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும் பங்கேற்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

சர்வதேசப் பந்தய வீரராக இந்தப் போட்டியில் களமிறங்கும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பில் 16 ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தய சிற்றூந்தை இயக்கவுள்ளார்.
இந்தநிலையில், பந்தய மைதானத்துக்கு வருகை தந்த நடிகர் அஜித்தைக் கண்டதும், முதலமைச்சர் விஜய் விரைந்து சென்று அவரை நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி, அன்பு முத்தமிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தமிழ் திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட இரு பெரும் நட்சத்திரங்கள், சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து நின்று அன்பைப் பரிமாறிக்கொண்ட காட்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும் ரசிகர்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
CM Vijay X Racer Ajith! https://t.co/kYlJBpF7C2
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) September 12, 2026