பிக்பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில்....இலங்கையர்களுமா? ஆர்வத்தில் ரசிகர்கள்!
தென்னிந்திய பிரபல தனியா டிவில் இல் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஆரம்மாகும் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெளி உலக தொடர்பின்றி ஒரே வீட்டில் சக போட்டியாளர்களுடன் தங்கி, கொடுக்கப்படும் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றும் ஒருவரே, மக்கள் வாக்குகளின் ஆதரவுடன், பிக்பாஸ் பட்டத்தையும் பரிசுத் தொகையையும் வெல்லுகிறார்.
இலங்கையர்களும் உள்ளீர்க்கப்படுகின்றனரா?
ஜியோஸ்டார் Head of Cluster, Entertainment (South) கிருஷ்ணன் குட்டி பிக்பாஸ் தமிழ் சீசன் 9, அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார் வரவிருக்கும் ஒன்பதாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார்.
அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி, தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
அதேவேளை பிக்பாஸ் தமிழ் இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழ் மக்களையும் கவர்ந்த நிகழ்ச்சியாகும். காரணம் இலங்கை தமிழர்களும் இதில் உள்ளீர்க்கப்படுவதாகும்.
அந்தவகையில் கடந்த சீசன்களில், லாஸ்லியா, தர்க்ஷன், ஜனனி ஆகியோர் பங்கு பற்றி இருந்தனர். இம்முறையும் இலங்கையர்களும் உள்ளீர்க்கப்படுகின்றனரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.