தமிழர் பகுதியில் இரு இளைஞர்களின் மரணத்தால் பெரும் துயரம் ; கதறும் குடும்பம்
தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை - சியம்பலாண்டுவ வீதியில், இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (14) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
ஹிங்குரானவிலிருந்து தமன நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த லொரியுடன் மோதியதில் இநத விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அதில் பயணித்த ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் எனவும் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் அம்பாறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.