கரூர் துயரத்தின் ஓராண்டு நினைவில் முதலமைச்சர் விஜய் உருக்கம்
கரூர் பெருந்துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற சம்பவம் தமது வாழ்விலும், கரூர் மக்களின் வாழ்விலும், தமிழக மக்களின் மனங்களிலும் ஆறாத ரணமாகவும் தீராத வலியாகவும் பதிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தால் ஏற்பட்ட வேதனையைத் தாம் தொடர்ந்து சுமந்து நிற்பதாகவும், சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் பெருந்துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அஞ்சலிச் செய்தி கவனம் பெற்றுள்ளது.