சனி நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க அதிர்ஷ்ட மழையில் நனைய போறாங்க
ஜோதிடத்தின் படி, சனி பகவானின் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த சனி பகவான் அக்டோபர் 09 ஆம் திகதி வக்ர நிலையில் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டின் பிப்ரவரி 08 ஆம் திகதி வரை இருக்கப் போகிறார். சொந்த ராசிக்கு சனி பகவான் மீண்டும் நுழைந்து பயணிப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ரிஷபம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பொருள் வசதிகள் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.
மகரம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு வெற்றிகளைத் தரும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கப்படும். குடும்ப உறுப்பினர்களிடன் ஆதரவுடன் உங்கள் வேலைகளை எளிதில் முடிப்பீர்கள். சொந்த தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், அதற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு ஒவ்வொரு விஷயத்திலும் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடனான உறவுகள் வலுவடையும். நிதி நிலைமை மேம்படும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.
மின்னேரியா விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட வவுனியா இளம் ஆசிரியை ; தொடரும் சந்தேகங்கள் ; வலுக்கும் கோரிக்கை
கும்பம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். காதல் திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருந்தால் அது நிறைவேறும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக பணியிடத்தில் உங்களின் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் கிடைக்கும்.