கரூர் வழக்கில் CBI தலைமையகத்தில் விஜய் ; நடந்தது என்ன?
கரூர் மாவட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் நேரில் முன்னிலையானார்.
சுமார் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளுடன் அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூரில் நிகழ்ந்த நடந்த சோகமான உயிரிழப்புகள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக, த.வெ.க. தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு முன்னிலையானார்.

சி.பி.ஐ. அதிகாரிகள் நான்கு பேர் கொண்ட குழு, விஜய்யிடம் மட்டும் தனியாக விசாரணையை முன்னெடுத்ததாகத் தெரிகிறது. இந்த விசாரணையின் போது, வழக்குத் தொடர்பாக சுமார் 80க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகத் தகவல் கசிந்துள்ளது.
விசாரணை நிறைவடைந்த பின்னர், அவர் ஆதவ் அர்ஜூனாவுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
முதலில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக அவர் இன்று இரவு டெல்லியில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், பொங்கல் திருநாளுக்குப் பிறகு விசாரணைக்கு முன்னிலையாவதாக விஜய் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டது.
இதன்படி இன்று நடைபெறவிருந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் முன்னிலையாக வேண்டிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.