சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி ; பெண் ஒருவர் கைது!
சமூக வலைத்தளங்களில் அண்மைய காலமாக வெகுவாகப் பகிரப்பட்டு வந்த சிறுவன் ஒருவர் தாக்கப்படும் காணொளியுடன் தொடர்புடைய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த காணொளி ஒக்டோபர் 31 ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது. இத்தாக்குதல் சம்பவம் கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணொளி தொடர்பில் விசாரணை
காணொளி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த எந்தேரமுல்ல பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர்ப் பணியக உத்தியோகத்தர்கள் அன்றைய தினமே சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பெண்ணை கைதுசெய்யதுள்ளனர்.
தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளான சிறுவனையும் உடனடியாக மீட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக அச்சிறுவன் கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
தாக்குதலில் காயமடைந்த சிறுவன் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கருவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக சட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.