மகனை சித்திரவதை செய்து தாய்க்கு காணொளி ; தந்தை கைது
தனது மூன்று வயது மகனுக்கு உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்த தந்தை கைது செய்யப்பட்டுளார்.
சந்தேகநபர் கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் இருந்து புதன்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர் .
தாய் வெளிநாட்டில்
குறித்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் , கணவனுக்கு பணம் அனுப்பவில்லை என கூறியே சிறுவனை சித்திரவதை செய்து அதன் காணொளியை மனைவிக்கு அனுப்பியுள்ளார் .
இந்த காணொளியை குறித்த பெண் சமூக வலைதளங்களில் வெளியிட்டதுடன் , தனது மூன்று வயது சிறுவனை காப்பாற்றுமாறு பதிவிட்டுள்ளார் .
அதற்கமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர் .