இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான வறுமை
இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான வறுமை உச்சத்தை எட்டியுள்ளதாக ஜோசப் ரவுண்ட்ரீ அறக்கட்டளை எச்சரித்துள்ளது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 14.2 மில்லியன் மக்கள் வறுமையில் வாடும் நிலையில், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆய்வாளர்கள் கவலை
தற்போதைய அரசு குழந்தைகள் நலனுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதிலும், ஒட்டுமொத்த வறுமை விகிதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதால், ஏனைய எளிய மக்கள் சமூகப் பாதுகாப்பின்றி தவிப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் , குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த நெருக்கடியைக் கையாளப் போவதாக அரசாங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.