கொலைகுற்றச்சாட்டு; இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர் விளக்கறியலில்
இந்தியா கொச்சி விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த வாழைத்தோட்டம் தினுஷ என்று அழைக்கப்படும் தினுஷ சத்துரங்க பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தி வருவதாக வாழைத்தோட்டம் பொலிஸார் கொழும்பு பிரதான நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்தியாவிற்கு சென்று அவரை கைது
வாழைத்தோட்டம் தினுஷ என்பவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இந்தியாவிற்கு சென்று அவரை கைதுசெய்து கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2015.01.15 அன்று வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மன்னா கத்தியால் நபரொருவரை தாக்கி கொலை செய்துள்ளதாகவும், 2018 03. 08 அன்று நபரொருவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாகவும் மேலும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.