கசிந்த காணொளி... பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகளுக்கு என்ன உறவு? அறிக்கை கோரும் கல்வி அமைச்சு
கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவருக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் அது தொடர்பான காணொளிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா பாடசாலையின் அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தற்போது பரப்பப்படும் காணொளிகளை கல்வி அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள்
பாடசாலை அதிபரின் அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் முடிந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.
மேலும் அறிக்கை கிடைக்கும் வரை, சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
தற்போது, குறித்த மாணவர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவரின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.