வாகன இறக்குமதி வரி விவகாரம் ; அரசாங்கத்துக்கு புதிய கோரிக்கை
வாகன இறக்குமதியின் போது சுங்க இறக்குமதி வரியின் மீது 50 சதவீத மேலதிக வரி விதிப்பதற்கு முன்னதாக, வாகன இறக்குமதிக்கான கடன் பத்திரங்கள் திறப்பதில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர்களுக்கு நேர்ந்த கதி ; கொழும்பில் முறைப்பாடு
கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதி செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், புதிய வரி விதிப்புகளுக்கு முன்பு கடந்த கால நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருவதாக அரோஷ ரொட்ரிகோ தெரிவித்தார்.
இதன் விளைவாக வாகன சந்தையில் எதிர்காலத்தில் மேலும் விலை உயர்வு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.