பிரபல அம்மன் ஆலயத்திற்குள் புகுந்து கைவரிசையை காட்டிய திருடர்கள்!
உடப்பு ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் ஆலயத்திற்குள் நுழைந்த திருடன் ஒருவர் 25 இலட்சத்திற்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தை திருடிச் சென்றுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பக்தர்களினால் காளியின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுனுக்கும் அதிகமான தங்க நகைகளும், தங்கத்தால் செய்யப்பட்ட காளியின் பிற அலங்கார பொருட்களும் திருடி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், ஆலயத்தில் உள்ள உண்டியலை உடைத்து பெருமதியான பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளி அம்மன் ஆலயத்திற்குள் ஒருபுறம் உள்ள சிறிய வாயிலின் சாவியை உடைத்து முகத்தை மறைத்துகொண்டு திருடன் ஆலயத்திற்குள் நுழையும் காட்சி சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார், தடவியல் பொலிஸார் மற்றும் பொலிஸ் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.