வவுனியா நீதிமன்றிற்கு அருகே பாரிய விபத்து: இருவருக்கு நேர்ந்த விபரீதம்
வவுனியா மாவட்ட நீதிமன்றிக்கு அருகே இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று (09.06.2023) மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஏ9 வீதியூடாக வைத்தியசாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து நீதிமன்றிக்கு அருகே வீதியின் மறுபக்கம் சென்று வீதி தடுப்புச்சுவரில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பேர் காயங்களுக்குள்ளாகியதுடன் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.