நெஞ்சை உலுக்கிய பயங்கரம் ;10 வயது சிறுமியை பழிதீர்க்க 14 வயது சிறுவன் கொடூரம்
ஐதராபாத்தில் கிரிக்கெட் பேட் திருட முயன்றதை நேரில் பார்த்த 10 வயது சிறுமியை, 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் குக்கட்பல்லி பகுதியில் கடந்த 18ம் திகதி10 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பேட்டுகாக நடத்தப்பட்ட கொலை
அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், பொலிசாருக்கு ஆரம்பத்தில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. சந்தேகத்திற்குரிய வகையில் யாரும் வீட்டிற்குள் நுழைந்ததற்கான தடயங்கள் இல்லை.
தீவிர விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபரான 14 வயது சிறுவனைப் பிடித்து விசாரித்த போது சிறுவன், சிறுமியை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
இந்த கொலைக்கான காரணம் தொடர்பில் வெளியவந்துள்ளதாவது ‘குற்றம் சாட்டப்பட்ட சிறுவன், கொலை செய்யப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர். அவர், மொட்டை மாடி வழியாக கட்டிடத்திற்குள் நுழைந்து, சிறுமியின் தம்பிக்குச் சொந்தமான கிரிக்கெட் பேட்டைத் திருடுவதற்காக அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
அப்போது சிறுமி அவனைப் பார்த்து கூச்சலிட்டதால், அங்கிருந்த கத்தியை எடுத்து சிறுமியை 20 முறை கொடூரமாகக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சிறுமி கொலையானார்.
பின்னர், கத்தியையும் தனது கைகளையும் கழுவி, உடைகளை மாற்றிக்கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி சாதாரணமாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து, குற்றத்தைச் செய்யத் திட்டமிட்டுக் கையால் எழுதிய குறிப்பு, திருடப்பட்ட கிரிக்கெட் பேட் மற்றும் குற்றத்தின்போது அணிந்திருந்த உடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.