ஆடைகளை உற்பத்தி செய்வதற்கான மிகவும் விலையுயர்ந்த இடமாகக் காணப்படும் இலங்கை
இலங்கையின் ஆடை உற்பத்திகளுக்கு இங்கிலாந்திற்குள் வரிகள் பூஜ்ஜியமாக இருந்தாலும் உலகளாவிய ரீதியில் ஆடைகளை உற்பத்தி செய்வதற்கான மிகவும் விலையுயர்ந்த இடமாக இலங்கை தனித்து நிற்பதாக சந்தை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலையில் பங்காளதேஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இலங்கையை விட குறைந்த உற்பத்தி செலவுகளில் ஆடைகளை உற்பத்தி செய்கின்றன.
எனவே இது இலங்கையை மற்ற சந்தைகளுடன் போட்டித்தன்மைக்கு உட்படுத்தியுள்ளதாக கூட்டு ஆடை சங்க மன்றத்தின் செய்தி பேச்சாளர் யோஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை உட்பட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் கீழ் தாராளமயமாக்கப்பட்ட விதிகளை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் இந்த சீர்திருத்தம், இலங்கை உற்பத்தியாளர்களுக்கு இங்கிலாந்து சந்தைக்குள் வரி இல்லாத அணுகலை தொடர்ந்தும் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.