வரதட்சணை கொடுமை ; இளம்பெண் மீது தீ வைத்து கொலை செய்த கொடூர கணவர்
இந்தியா- டெல்லி அடுத்த நொய்டாவில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் பொலிஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற கணவனை பொலிஸார் சுட்டு பிடித்தனர்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபின் என்பவருக்கும் நிக்கி என்பவருக்கம் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது.
இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நிக்கியின் கணவன் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கினர்.
இந்தக் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நிக்கி மீது ஆசிட் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர்.
இதில் உடல்கருகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விபினை பொலிஸார் கைது செய்த நிலையில் இந்த விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது பொலிஸார் காவலில் இருந்து விபின் தப்பியோட முயற்சித்தார்.
உடனே அவரை பிடிக்க முயன்ற பொலிஸார் அவரின் காலில் சுட்டனர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.