வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல்; மலையென குவித்த பக்கதர்கள்!
வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் விழா தற்போது இடம்பெற்று வருகின்றது.
உப்புநீரில் விளக்கெரியும் அதசயத்தை கொண்டுள்ள வற்றப்பாளை எம்பிராட்டிக்கு இன்று (20) அதிகாலை தொடக்கம் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பெருந்திரளாக பக்கதர்கள் வருகை தந்து பால் குடங்களை எடுத்து, காவடிகளை ஏந்தியும் ,தங்களது நேர்த்திகடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
அதேவேளை இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயமும் ஒன்றாகும்.
வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசி பொங்கள் பெருவிழாவிற்கு வன்னி பெரு நிலப்பரப்பில் உள்ள மக்கள் மட்டுமல்லாது, வேறு மாவட்டக்களில் இருந்தும் மக்கள் சென்றௌ கலந்துகொள்கின்றமை சிறப்பான அம்சமாகும்.