மரத்தில் மோதி வேன் கோர விபத்து; 11 பேர் மருத்துவமனையில்
மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (26) இரவு 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் வேனில் பயணித்த 11 பேர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை பகுதியைச் சேர்ந்த இவர்கள் அனுராதபுரத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
காயமடைந்தவர்களில் 6 பேர் பதுளை வைத்தியசாலையிலும், 5 பேர் மஹியங்கனை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.