இலங்கையில் 300 ரூபாவைக் கடந்த டொலரின் பெறுமதி
இன்று (10) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.02 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.13 ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை 2024 செப்டம்பர் 27ஆம் திகதிக்கு பின்னர், டொலர் ஒன்றின் பெறுமதி 300 ரூபாவைக் கடக்கும் முதலாவது சந்தர்ப்பம் இது ஆகும் .
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 391.0050 ரூபா மற்றும் கொள்வனவு விலை 376.5390 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 334.6344 ரூபா எனவும் கொள்வனவு விலை 320.7875 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (10.4.2025) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்,