ஓமான் வளைகுடாவில் அமெரிக்க இராணுவ அதிரடி ; ஈரானின் 11 கப்பல்கள் மூழ்கடிப்பு
ஓமான் வளைகுடாவில் ஈரானுக்கு சொந்தமான 11 கப்பல்களைத் தாம் மூழ்கடித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (Centcom) தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த பகுதியில் ஈரானிடம் எவ்வித கப்பல்களும் எஞ்சியிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (Centcom) தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

இரண்டு நாட்களுக்கு முன்பு ஓமான் வளைகுடாவில் ஈரானிய ஆட்சியிடம் 11 கப்பல்கள் இருந்தன, ஆனால் இன்று அது பூச்சியமாக (ZERO) உள்ளது.
ஈரானிய ஆட்சி பல தசாப்தங்களாக ஓமான் வளைகுடாவில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதோடு தாக்குதல்களையும் நடத்தி வந்தது. அந்த நாட்கள் இனி முடிந்துவிட்டன.
கடல்சார் பயண சுதந்திரமானது 80 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதார செழிப்பிற்கு அடித்தளமாக இருந்து வருகிறது.
அமெரிக்கப் படைகள் அதனைத் தொடர்ந்து பாதுகாக்கும் என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளது.