தமிழர் பிரதேசத்தில் அதிர்ச்சி; இளம் தாய் கூட்டு வன்புனர்வு ; மகன் செய்த கொடும் செயல்

Vavuniya Sexual harassment Sri Lanka Police Investigation Women
By Sulokshi Aug 15, 2026 04:57 PM GMT
Report

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்  (14) தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,

 முதல் கணவரின் மகனே திட்டமிட்டு கொடும் செயல்

கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண் அணிந்திருந்த நகைகளை  கொள்ளையிட்டு  கூட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15 பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிசார் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். 

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான சந்தன (16446), கேரத் (14692), பியங்கர ( 47358), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான நவகீதன் ( 8098), சுப்புன் (28752), சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35 வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் , சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் முதல் கணவரின் மகனே திட்டமிட்டு இச் சம்பவத்துக்கு மூலகாரணமாக செயல்பட்டு இக் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியதாக கூறப்படுகின்றது.

மகனே  தனது காரில் களேமிதுனுவெல சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேக நபர்களை ஏற்றி வந்து வீட்டு அருகில் வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என்பவற்றை மீட்டது.

அத்துடன், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைணகளின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US