இலங்கையில் அமெரிக்க தூதரக அதிகாரியிடம் கைவரிசை காட்டிய திருடர்கள்
குருதுவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரியின் கைப்பை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் நேற்று இரவு (31-10-2022) இடம்பெற்றுள்ளது.
குருதுவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் குறித்த அதிகாரி வசித்து வந்துள்ளார்.
நேற்று மாலை அந்த வீட்டில் இருந்து அருகில் உள்ள விருந்தில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் அவரது கைப்பையை திருடி சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அமெரிக்க தூதரக அதிகாரியின் கைப்பையை திருடி , தப்பியோடியவர்களின் மோட்டார் சைக்கிள் தற்போது அடையாளம்காணப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.