இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்காவின் அதிரடித் தடை
மனித உரிமை மீறல்களுக்காக மேலும் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. போர் குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான தடைகளை வெளியுறவுத்துறை மேலும் அதிகரித்துள்ளது.
‘Trinco 11’ காணாமல்போன சம்பவங்களில் தொடர்புடைய இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க என்ற சிப்பாய் ஆகியோருக்கு இப்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
போர் குற்றத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக அமெரிக்காவுக்குள் நுழைய தடை செய்யப்பட்ட மேலும் இவர்கள் இவர்களே. இதற்கு முன்பாக 2020 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத் தளபதி சாவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்க தெரிவித்ததாவது,
மனித உரிமை மீறல்கள் எங்கு இடம்பெற்றாலும் அதற்கான நடவடிக்கைகளையும் பொருத்தமான கருவிகள் மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.