தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாதம் என கூறுகின்றன; புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி
தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாத விடயங்களை கையிலெடுத்துள்ளன ,எனவே பொலிஸார் சட்ட அமுலாக்கலில் இந்த விடயத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார்.
நாடாளும்ன்றித்தில் இன்று வருகை தந்தபோதே ஜனாதிபதி அனுரகுமார இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சமய ஸ்தலம் என்ற ஒன்று அந்த இடத்தில் இல்லை
திருமலை புத்தர் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் பாதுகாப்பு சரியானதுடன் அது மீண்டும் வைக்கப்பட்டது. அந்த காணியில் அமைந்த உணவகம் சட்டவிரோதம் என்று கூறி நீதிமன்ற வழக்கு உள்ளது.
சமய ஸ்தலம் என்ற ஒன்று அந்த இடத்தில் இல்லை. இப்போது விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனை இனவாதமாக்க இடமளிக்கமட்டேன். இந்த நாட்டில் பௌத்த மக்களும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள்.
யாரும் இனவாத தீயை மூட்ட விட மாட்டோம். ஜனநாயகத்துக்கு விரோதமாக செய்வதற்கு எதுவுமில்லை. நேர்மறை எண்ணங்களை நாம் வளரவிடுவதுமில்லை. பாதுகாப்பு அமைச்சரிடம் இது தொடர்பான முழுமையான அறிக்கை கோரியுள்ளேன்.
நீதிமன்ற வழக்கு உள்ளது. பின்னர் ஏன் ஆடுகின்றீர்கள்? இனவாதிகள் தான் இதை பெரிதாக காட்டுகின்றார்கள். சின்னவயது ஹனுமான் ஓடிஆடி தீயை பரப்பியது போல் தான் இங்கும் நடக்கின்றது.
இனவெறியை பொறுத்துக்கொள்ள முடியாது, அந்த விளையாட்டு முடிந்துவிட்டது என்றும் ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார்.
அதேவேளை திருமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் 1952ஆம் ஆண்டே விகாரை இருந்ததாக நாமல் ராஜபக்க்ஷ நாடாளுமன்றில் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.