நாட்டில் முன்னணி வங்கிகள் பல விடுத்துள்ள அவசர அறிவித்தல்
நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு, சில முன்னணி வங்கிகள் தங்களின் கிளை சேவை நேரங்களில் தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளன.
இதன்படி Commercial Bank வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026 மார்ச் 18 முதல், மறு அறிவிப்பு வரும்வரை ஒவ்வொரு புதன்கிழமையும் வங்கியின் கிளைகள் குறைந்த நேரத்தில் மட்டுமே திறந்திருக்கும் என அறிவித்துள்ளது.
அதன்படி மினிகொம் கிளைகள் மற்றும் சுப்பர் மார்க்கெட் கிளைகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை செயற்படும்.

மற்றைய கிளைகள் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை மட்டுமே வங்கிச் சேவைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், Seylan Bank வெளியிட்டுள்ள அறிவிப்பில் - 2026 மார்ச் 18 முதல், மறு அறிவிப்பு வரும்வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து செலான் வங்கிக் கிளைகளும் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை மட்டுமே செயற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கித் தேவைகளுக்காக 24 மணி நேர ஸ்மார்ட் வங்கிச் சேவைகளை பயன்படுத்துமாறும் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், DFCC Bank தனது கிளைகளின் சேவை நேரத்திலும் மாற்றம் அறிவித்துள்ளது.
அதன் படி ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே கிளைகள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் DFCC ONE மொபைல் செயலி அல்லது இணைய வங்கி சேவைகள் மூலம் எப்போது வேண்டுமானாலும் தங்களின் வங்கிப் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட் டால், எங்கள் 24 மணி நேர தொடர்பு மையத்தை 011 235 00 00 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேலதிக தகவல்களுக்கு, எங்கள் இணையத் தளமான WWW.DFCC.LKஐயையும் பார்வையிடலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
NDB வங்கி வெளியிட்ட அறிவிப்பில், 18.03.2026ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை எமது சகல கிளைகளினது அலுவலக நேரம் ஒவ் வொரு புதன்கிழமையும் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.