கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு ; பரிதாபமாக உயிரிழந்த இரு சிறுமிகள்
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
விவசாயியான மல்லேஷ், அறுவடை செய்து வீட்டிற்குள் வைத்திருந்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருப்பதற்காகப் பகல் நேரத்தில் பூச்சி கொல்லி தெளித்துள்ளார்.

அன்று இரவு, வீட்டின் அறைக்குள் காற்று புக முடியாத சூழலில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியிலிருந்து நச்சு வாயு மெதுவாக வெளியேறியுள்ளது.
அறையிலிருந்த நச்சு வாயுவை அறியாமல் சுவாசித்தவிவசாயிகளின் மகள்கள் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அறுவடை செய்த தானியங்களைப் பாதுகாப்பதாக நினைத்துச் செய்த செயல், பிள்ளைகளின் உயிரை பறித்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.