யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை ; அவதானம் மக்களே

Jaffna Sri Lankan Peoples Jaffna Teaching Hospital
By Vironika Oct 30, 2026 01:11 AM GMT
Report

 ஆபத்தான நீர்நிலைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி , யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவப் பிரிவில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடக்கில் அண்மையில் பெய்த மழையினால் கிணறுகள், குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் அதிகளவு நீர் தேங்கி நிற்கின்றது.

யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை ; அவதானம் மக்களே | Urgent Alert Issued By Jaffna Teaching Hospital

உயிரிழப்புகள் 

இந்நிலையில் சிறுவர்கள், இளைஞர்கள் உட்பட அனைவரும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். கடந்த வருடமும் இதே காலப்பகுதியில் நீர்நிலைகளில் தவறி விழுந்தும், குளிக்கச் சென்றபோதும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாகப் புங்குடுதீவு, காரைநகர் போன்ற பகுதிகளில் பாதுகாப்பற்ற திறந்த கிணறுகள் அதிகளவில் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அவை நீரால் நிரம்பும்போது ஆபத்தை எளிதில் அடையாளம் காண முடியாமல் போகலாம்.

எனவே சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இவ்வாறான இடங்களை உடனடியாக அடையாளம் கண்டு, பாதுகாப்பு வேலிகள், மூடிகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள் போன்ற பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கள்ளகாதலனுடன் தகாத உறவு ; 2வது கணவருக்கு நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்

கள்ளகாதலனுடன் தகாத உறவு ; 2வது கணவருக்கு நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்

ஏனைய பகுதிகளிலும் இத்தகைய ஆபத்தான கிணறுகள் அல்லது நீர்நிலைகள் காணப்பட்டால், அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவ வேண்டும். பெற்றோர்களும் தமது பிள்ளைகளை நீர்நிலைகளுக்கு அருகில் தனியாகச் செல்ல அனுமதிக்காமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவப் பிரிவில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நீர்நிலைகளில் தவறுதலாக வீழ்ந்து உயிரிழந்த சம்பவங்கள் கவனத்திற்குரியதாக உள்ளன.

கிடைக்கப்பெற்ற பதிவுகளின்படி, இவ்விரு ஆண்டுகளிலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள் ஆவர். உயிரிழந்தவர்களின் வயது 6 முதல் 71 வயது வரை காணப்படுகின்றது.

தமிழர் பகுதியில் பேருந்தில் பயணித்த குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

தமிழர் பகுதியில் பேருந்தில் பயணித்த குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

2025 ஆம் ஆண்டில் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 3 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள். ஆண்களின் வயதுகள் 8, 39, 71 ஆகவும், பெண்களின் வயதுகள் 28, 36, 58, 60, 65 ஆகவும் காணப்படுகின்றன.

2026 ஆம் ஆண்டில் 7 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 6 பேர் ஆண்கள், ஒருவர் பெண். ஆண்களின் வயதுகள் 6, 26, 33, 51, 52, 71 ஆகவும், பெண்ணின் வயது 66 ஆகவும் உள்ளது.

இந்தச் சம்பவங்களை அவதானிக்கும்போது, குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பற்ற கிணறுகள் அல்லது ஏனைய நீர்நிலைகளில் தவறி வீழும் அபாயம் காணப்படுகின்றது.

70-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சீரழித்த சகோதரர்களுக்கு கிடைத்த அதிரடி தண்டனை

70-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சீரழித்த சகோதரர்களுக்கு கிடைத்த அதிரடி தண்டனை

குறிப்பாக 6 மற்றும் 8 வயதுடைய சிறுவர்களின் உயிரிழப்புகள், குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அருகில் கண்காணிப்பின்றி விளையாட அனுமதிப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்தை நினைவூட்டுகின்றன. அதேவேளை, வயதானவர்களில் சிலர் மதுபோதையில் இருக்கும்போது நீர்நிலைகளுக்கு அருகில் சென்று தவறுதலாக வீழ்வதற்கான அபாயமும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே மதுபோதையில் உள்ளவர்கள் கிணறுகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்ப்பதும், குடும்பத்தினர் அவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US