கோர விபத்தில் ஒருவர் பலி ; பெண் மற்றும் 11 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொணராகலை - வெடிகும்புற வீதியின் 04 ஆம் கம்பத்திற்கு அருகில் தெனகல்லந்த பகுதியில் இருந்து மொனராகலை திசையை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன், எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அதன் பின்புறத்தில் பயணித்த ஆண் ஒருவர், பெண் ஒருவர் மற்றும் 11 வயதுடைய சிறுவன் ஆகிய நால்வரும் காயமடைந்து சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பின்புறத்தில் பயணித்த ஆண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மொணராகலை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய நபராவார்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மொணராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.