கள்ளகாதலனுடன் தகாத உறவு ; 2வது கணவருக்கு நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்
டெல்லியில் கள்ளக்காதலருடன் இணைந்து அரசு ஊழியரை கொல்ல மனைவி திட்டமிட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. எனினும், மனைவிக்கு இது 2-வது திருமணம் ஆகும்.

தீவிர விசாரணை
இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. மனைவிக்கு ஜிம்முக்கு செல்லும் வழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், காலையில் வீட்டில் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த கணவரை மர்ம நபர் கத்தியால் பலமுறை குத்தியுள்ளார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அந்த நபர் சிக்காமல் தப்பியோடி விட்டார். அப்போது, மனைவி காரில் ஏறி, வெளியே சென்று விட்டார்.
இதுதொடர்பாக பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. பிரியாவுக்கு ஜிம் பயிற்சியாளருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
சில சமயம் உடல்நலம் சரியில்லை என கூறி பிரியா வீட்டிலேயே தங்கி விடுவார். கணவர் வேலைக்கு சென்றதும் சிங்கை வீட்டுக்கு வரவழைத்து தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஒரு கட்டத்தில் இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த கணவர், தீபாவளிக்கு பின்னர் வேறு வீட்டுக்கு செல்லலாம் என முடிவு செய்துள்ளார். மனைவியிடம் தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதனால், கொலை செய்து விடும்படி பிரியா கூறியுள்ளார்.
அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து, பிரியா மற்றும் ஜிம் பயிற்சியாளரை கைது செய்தனர். சஷாங்க் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.