வீதியில் நடமாடிய 85 பேருக்கு என்டிஜன் பரிசோதனை
ஊரடங்கு அமுலில் உள்ள சமயத்தில் வீதியில் நடமாடி திரிந்த 85 பேருக்கு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் அநாவசியமாக வீதிகளில் நடமாடிய 85 பேரை நேற்று பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசாருடன் இணைந்து பிடித்து என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி. மோகனகாந்தன் தெரிவித்தார்.
நாட்டில் ஊடரங்கு தனிமைப் படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மீறி திருக்கோவில் பிரதேசத்தில் பொதுமக்கள் அநாவசியமாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் நடமாடி வருகின்றனர். இந்த சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடுவர்களை பொலிசாருடன் இணைந்து பொது சுகாதார பரிசோதகர்கள் பிடித்து வீதிகளில் வைத்து அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இவ்வாறு அநாவசியமாக வீதிகளில் நடமாடியவர்கள் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி கண்டறியப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.