பிரபல நடிகை காயத்ரி டயஸ் CID இல் வாக்குமூலம்
இலங்கையின் பிரபல நடிகை காயத்ரி டயஸ் CID இல் முன்னிலையானார்.
பிரபல அழகுக் கலை நிபுணரும், நடிகையுமான காயத்ரி டயஸ், இன்று (24) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார்.

சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டு
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.
அதேவேளை நடிகை காயத்ரி டயஸ், சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் 'கெஹல்பத்தர பத்மே' உடன் தன்னை தொடர்புபடுத்துவதாக சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.
அதோடு ஒரு அறிக்கையில், டயஸ் குற்றச்சாட்டுகளை பொய்யானது மற்றும் புண்படுத்தும் வகையில் நிராகரித்தார், மேலும் எந்த குற்றவாளிகளுடனும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் நடிகை காயத்ரி டயஸ் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.