வீடு ஒன்றில் பிடிபட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ; ஹெரோயின் மீட்பு
அம்பலாங்கொடை, மாதம்பாகம, தேவகொட பகுதியில் உள்ள 'அல்லிய தேவாலயத்திற்கு' அருகிலுள்ள வீடு ஒன்றில் 120 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய பிராந்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட நபர், வெளிநாட்டில் வசிக்கும் 'சமன்கொல்லா' என அழைக்கப்படும் இடந்தோட்ட அகம்பொடி சஜித் பிரியந்த எனும் பாதாள உலகக் குழுத் தலைவரின் உதவியாளர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாதம்பாகம தேவகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.