ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இருவர் இலங்கையில் அதிரடி கைது! அதிர்ச்சி பின்னணி
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கைதான ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் சிலாபம் - பங்கதெனிய பகுதியில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களும், சகோதரர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்களையும், இலங்கையில் இருந்து ஒஸ்மன் ஜெராட் என்பவரே வழி நடத்தியுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தொடர்பான தகவல்களை வழங்கும் நபருக்கு 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒஸ்மன் ஜெராட் எனும் நபர் தமது தோற்றத்தை அடிக்கடி மாற்றியிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளது.