வவுனியாவில் மாட்டை திருடி சென்ற இருவர் மக்களால் மடக்கி பிடிப்பு
வவுனியா சமயபுரம் பகுதியில் இருந்து மாட்டை திருடி சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் இருவர் நேற்று (05) கிராம மக்களால் பிடிக்கப்பட்டு நெளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுக்கள் கால்கள் கட்டப்பட்ட நிலையில், இறைச்சிக்காக இரவு வேளையில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதைக் கண்ட கிராமவாசிகள், பின்னர் முச்சக்கரவண்டியை துரத்திச் சென்று சந்தேக நபர்களை சுற்றிவளைத்துள்ளனர்.
சாலம்பகுளம் பகுதியிலுள்ள பசு வெட்டப்படும் பகுதிக்கு இந்த பசுக்களை சிலருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக சந்தேக நபர்கள் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு சந்தேக நபர்களையும் வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நெளுக்குளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.