புதையல் தோண்டிய வழக்கு ; கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபருக்கு விளக்கமறியலில்!
புதையல் தோண்டியமை தொடர்பில் கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை செப்டம்பர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், தமது மனைவி புதையல் தோண்டியமை தொடர்பாக, கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பிரதி காவல்துறை மாஅதிபர் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்குச் சென்றமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமையும், தொலைபேசி ஆய்வுகள், பாதுகாப்பு கெமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.