அர்ச்சுனா எம். பி தாக்கியதில் இருவர் மருத்துவமனையில்!
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனா தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹோட்டலில் உணவு அருந்தச் சென்றபோது, எம்.பிக்கும் இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
பீங்கானால் நபரின் தலையில் தாக்கிய அர்ச்சுனா
நேற்று இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார். இதன்போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார்.
இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டார். இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதன்போது அர்ச்சுனா பீங்கான் ஒன்றினை எடுத்து குறித்த நபரின் தலையில் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.