படகு கவிழ்ந்ததில் 18 வயதுடைய இரு இளைஞர்கள் மாயம்
Sri Lanka Police
Missing Persons
Hambantota
Sri Lanka Police Investigation
By Sahana
ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.
மேலதிக விசாரணை
மீன்பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்கள் 18 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக திஸ்ஸமஹாராம கடற்படைப் பிரிவு மற்றும் டைவிங் பிரிவு இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US