நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள்! வைரலாகும் காணொளி
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெருவெள்ளத்தால் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள்
இந்த சம்பவம், பேரழிவு காலங்களில் துரிதமாக முன்னெடுக்கப்படும் மீட்புப் பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இரட்டைக் குழந்தைகளை நேபாள ராணுவ வீரர்கள் அரவணைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
VIDEO | Nepal floods: Rescued twin children comforted by Nepal Army personnel amid ongoing relief operations. pic.twitter.com/12fLMnjS0f
— Press Trust of India (@PTI_News) August 27, 2026
அதேவேளை நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.
இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.