தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; 19 வயது இளைஞனின் உயிரை பறித்த தொலைபேசி
கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (27) மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.
கல்குடா கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

பிரேத பரிசோதனை
குறித்த இளைஞன் சம்பவ தினமான வியாழக்கிழமை (27) மாலை வீட்டில் உறங்குவதற்கு சென்ற நிலையில் அவரது கையடக்க தொலைபேசியை மின்சாரத்தின் ஊடாக சார்ஜ் செய்து கொண்டு கையடக்க தொலைபேசியை அவரது நெஞ்சில் இருதயம் இருக்கும் பகுதியில் வைத்து கொண்ட நிலையில் உறங்கி கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கையடக்க தொலைபேசியின் பற்றி சூடாகி வெடித்ததையடுத்து படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.